- கேள்வி : நல்ல அறிவுரை கொடுத்தாலும் மனிதன் கேட்பதில்லையே, ஏன்?ஆர்.கனகவள்ளி ராமநாதன், பெரியகுளம்.
ஞானகுரு :
பிறருக்கு அறிவுரைகளை அள்ளியள்ளி வழங்குபவன், அதே அறிவுரையை பின்பற்றி நடப்பதில்லை. பிறரை மட்டம் தட்டுவதற்கும், குறை கூறுவதற்கும்தான் அறிவுரை என்ற பிரம்பை கையில் எடுக்கிறான். தன்னை செம்மைபடுத்திக் கொள்ளாமல் பிறருக்கு உபதேசம் செய்யப்படும் அறிவுரைகளை எந்த மனிதனும் மதிப்பதில்லை. உன்னைத் தவிர எல்லோரையும் மன்னித்துவிடு என்பதுதான் முதல் அறிவுரை. ஆனால் எவரையும் மன்னிப்பதில்லை என்ற கோட்பாட்டுடன் அறிவுரை சொல்லப்படுகிறது. கேட்காத இடத்தில் சொல்லப்படும் அறிவுரை பொன்னாக இருந்தாலும் குப்பையில்தான் வீசப்படும்.