- கேள்வி : ஞானகுரு சாமியாரா, பிரம்மச்சாரியா, குடும்பஸ்தனா?எம்.நளினிபிரபு, சங்கரன்கோவில்.
ஞானகுரு : மனிதனாக மட்டுமே பார். உண்ணும் உணவை விளைவித்தவன் யார் என்று பார்ப்பதில்லை. உடுத்தும் ஆடை நெய்தவனை உனக்குத் தெரியாது, அவனை தெரிந்துகொள்ள அக்கறை காட்டுவதும் இல்லை. தத்துவார்த்தமாகப் பேசுபவனை மட்டும் ஏன் தோலுரித்துப் பார்க்க ஆசைப்படுகிறாய்? சொல்லப்படும் கருத்துக்களை கவனி. உண்மையா என்று உனக்குள் யோசித்துப் பார். உனக்குப் பயன்படும் என்றால் கருத்தினை மட்டும் சுமந்துசெல், சொல்பவனைத் தூக்கி குப்பையில் போடு.