- கேள்வி : கல்விக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லையே, பிறகு ஏன் படிக்கவேண்டும்? ஆர்.சுதா ராஜேஷ், சாத்தூர்.
ஞானகுரு :
கல்வி கற்பது எதற்காக என்ற அடிப்படை அறிவுகூட மனிதர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் வேதனை. அறிவை வளர்த்துக்கொள்ளத்தான் கல்வி போதிக்கப்படுகிறது. மனித மூளையில் ஏகப்பட்ட ஆற்றல் கொட்டிக்கிடக்கின்றன. அந்த ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொண்டுவரும் பணியைத்தான் கல்வி செய்கிறது. கட்டடங்களை கலையாகப் பார்ப்பவன் சிவில் படித்தால், அவன் சிறந்த கட்டடக் கலை நிபுணராக மாறுவான். இந்தத் துறையில் பணம் கொட்டும் என்று ஒருவன் சிவில் படித்தால், அவன் படித்த கொத்தனாராகத்தான் இருப்பான். அதனால் மூளையையும் வேலையையும் தொடர்பு படுத்தாதே, தோற்றுப்போவாய்.