- கேள்வி : இல்லறத்தை நல்லறமாக மாற்றும் பொறுப்பு கணவன், மனைவியரில் யாருக்கு அதிகம்? வி.முத்துராமன், பேராசிரியர் காலனி,வாணியம்பாடி
ஞானகுரு :
புதிதாக திருமணம் முடிக்கும் ஒவ்வொரு தம்பதியரும், இனிமையான தனிக்குடித்தனத்துக்குத்தான் ஆசைப்படுகிறார்கள். ஒருவரையருவர் புரிந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் ஆனந்தமாக வாழவே விரும்புகிறார்கள். ஆனால் ஒருவர் அதிகமாகவும் மற்றவர் குறைவாகவும் பொறுப்பினை சுமக்கும் போதுதான் பிரச்னை உருவாகிறது. கணவன், மனைவிக்கு சமமான பொறுப்பு இருக்கும் வீட்டில் மட்டும்தான் ஆனந்தம் விளையாடும்.