- கேள்வி : ஆசைப்படுவது நல்லதா… கெட்டதா? வி.தேனினியாள், ஆண்டிப்பட்டி.
ஞானகுரு :
தன்னிடம் இருக்கும் ஒன்றின் மீது எவரும் ஆசை கொள்வதில்லை. தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருந்தால், அது அற்பமான பொருளாக இருந்தாலும் அதன் மீதுதான் ஆசைப்படுகிறார்கள். மனிதன் ஆசைப்படுவது நல்லதுதான். ஆசைதான் சாதிக்கத்தூண்டும். ஆனால் ஆசை உன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். ஆசையின் கட்டுப்பாட்டுக்குள் நீ விழுந்துவிட்டால் அழிவு நிச்சயம்.