- கேள்வி : அரிச்சந்திரன் போல் வாழ நினைக்கிறேன், என்னால் முடியுமா?வி.தர்மேந்திரன், என்.ஜி.ஓ. காலனி. சேலம்
ஞானகுரு :
பறவையும், விலங்கும் பொய் பேசுவதில்லை. ஐந்தறிவு உயிர்கள் செல்லும் வாய்மையின் வழியில் மனிதனாலும் வாழ முடியும். ஆனால் அதற்கு நீ தனி மனிதனாக இருக்கவேண்டும். நீ எவரை நம்பியும் இருத்தல் கூடாது, உன்னை நம்பியும் யாரும் இருக்கக்கூடாது. இது உன்னால் முடியும் என்றால், அரிச்சந்திரனாக மாறவும் முடியும்.