- கேள்வி : மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?எஸ்.பாக்கியராஜ், ஓடைத்தெரு.
ஞானகுரு :
ரோஜாவுக்கும் மல்லிகைக்கும் என்ன வித்தியாசம். அரிசிக்கும் கோதுமைக்கும் என்ன வித்தியாசம். அருவிக்கும் ஆறுக்கும் என்ன வித்தியாசம். அவைதான் மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வித்தியாசம்.
உணவு, பணம், சொத்து போன்றவற்றை சேமித்து வைப்பதன் மூலம் விலங்குகளிடம் இருந்து மேம்பட்டு வாழ்வதாக மனிதன் நினைக்கிறான். ஆனால் சேமிக்கும் எதையும் யாரும் எங்கேயும் கொண்டுபோக முடியாது என்பதை மனிதன் கடைசிவரை புரிந்துகொள்வதே இல்லை என்பதுதான் வேடிக்கை.