- கேள்வி : எந்த வயதில் வரும் காதல் சரியானது? வி.நளினி, ஆமத்தூர்.
ஞானகுரு :
இந்த நொடியில் இருந்து, தன்னை மட்டுமின்றி தான் விரும்பியவரையும் கடைசிவரை மகிழ்வுடன் வாழவைக்கமுடியும் என்ற நம்பிக்கை, சக்தி, திறன், அன்பு யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் அனைவரும் காதலிக்கும் தகுதி உடையவர்கள். இவர்களுக்கு வயது ஒரு தடையல்ல. அதேநேரம், இருபதுக்கு முன் வருவதை காதல் என்று சொல்லாதே.. அதை சொல்வதற்குரிய காலம் வரட்டும்.