- கேள்வி : இன்பம், துன்பம் போன்றவற்றைக் கடந்ததா ஞானிகளின் வாழ்க்கை? எஸ்.கமலம், சிவந்திபுரம் முதல் தெரு.
ஞானகுரு :
ஞானி, குரு, கடவுள், ஆசான் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்பவர்களும், சொல்லப்படுபவர்களும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. அவர்களும் ஒரு மானுடத் தாயின் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள்தான். நகைச்சுவைக்கு சிரிப்பதும் நோய்க்குத் துடிப்பதும் இன்பத்தில் மகிழ்வதும் துன்பத்தில் உழல்வதும் காமத்தில் நெளிவதும் ஞானியர்க்கும் இயல்புதான். அடுத்தவேளை உணவுக்கும் சொகுசுக்கும் உத்தரவாதம் கேட்பது சாதாரண மனிதர்களின் தன்மை. ஏதாவது நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்று அடுத்த வேளையைக் குறித்து அசட்டையாக இருப்பவன் ஞானி. இவ்வளவுதான் வித்தியாசம்.