- கேள்வி : சின்ன வயதில் பாசமாகப் பழகும் சகோதரர்கள், பெரியவர்களானதும் ஏன் சொத்துக்காக அடித்துக்கொள்கிறார்கள்?எஸ்.காமாட்சியம்மாள், கள்ளிக்குடி.
ஞானகுரு :
சின்ன வயதில் தாயும் தந்தையும் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அவர்களே வளர்ந்தபிறகு சொத்துதான் தன்னைக் காக்கும் என நினைக்கிறார்கள். அதனால்தான் அதிக சொத்துக்கு ஆசைப்பட்டு அடித்துக்கொள்கிறார்கள். சொத்து பகிர்வதில் பிரச்னை வந்தால், அந்த சொத்து அரசுக்கு சொந்தமாகும் என்ற நிலை உருவானால் எல்லோரும் பாச மலர்களாக மாறிவிடுவார்கள். உயிருடன் இருக்கும்போதே தங்கள் சொத்தை பிரித்துக்கொடுக்கும் மனம் பெற்றோருக்கு இல்லாததும் பிரச்னைகளுக்கு காரணமாகிவிடுகிறது.