- கேள்வி : .விவசாயம் செய்வதற்கு பலரும் முன்வருவதில்லை. ஏன் இந்த நிலை? எம்.மாணிக்கம், தாதம்பட்டி.
ஞானகுரு :
கையில காசு, வாயில தோசை என்பதுதான் இன்றைய மனிதர்களின் ஆசை. அதனால்தான் இயந்திரங்களுக்குப் பின்னே ஓடி பணத்தை அறுவடை செய்ய நினைக்கிறான். இதே மனிதன் இன்னும் சில வருடங்களில் வயல்களை நோக்கி ஓடத்தான் போகிறான். அப்போது விவசாயம் மட்டும்தான் லாபம் கொட்டும் பெரும் தொழிலாக இருக்கும். அதுவரை காத்திருக்காமல், இப்போதே இடம் பிடிப்பவன் புத்திசாலி.