- கேள்வி : நிம்மதியாக நாட்களை கழிப்பவர் பணக்காரனா, அறிவாளியா, சாமியாரா? வி.முகுந்தன், தெற்குரதவீதி. வேலூர்
ஞானகுரு :
வாழ்வின் ஒவ்வொரு நொடியும் எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்தது. அந்த திருப்பங்களை ரசிப்பவனே வெற்றியாளன். எந்த திருப்பமும் இல்லாமல், நிம்மதியாக வாழ முட்டாளாலும் சாமியாராலும் மட்டுமே முடியும். அதேநேரம், முட்டாள் ஒருவன் திடீரென அறிவாளியாக ஆசைப்பட்டால், அறிவாளி ஒருவன் திடீர் பணக்காரனாக ஆசைப்பட்டால், பணக்காரன் ஒருவன் வாழ்க்கையை வெறுத்து சாமியாராக ஆசைப்பட்டால்… அதுவரை கிடைத்த நிம்மதியும் காணாமல் போய்விடும்.