- கேள்வி : கோயிலுக்குப் போனாலே எனக்குள் சாமி வந்து இறங்கிவிடுகிறது. அந்த நேரங்களில் நான் ஆட்டம் போடுவதாகவும் அருள் வாக்கு சொல்வதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அப்போது என்ன நடக்கிறது என்பதே எனக்குத் தெரிவதில்லை. நான் என்ன செய்யவேண்டும்? என்.செல்வராகினி, அல்லனூர்.
கேள்வி:
உன் உடலுக்குள் புகுந்து ஆடுவது கடவுளின் வேலை இல்லை.. மனம் அதீதமான நம்பிக்கையில் சிக்கும்போது தன்னை மீறிய ஒரு மன நிலையில் மனிதன் சிக்கிக்கொள்வதுண்டு. ஒரு சில நிமிடங்கள் இந்த நிலை நீடிப்பதில் தவறில்லை. நிஜமாகவே கடவுள் இறங்கிவிட்டார், அருள் வாக்கு பலிக்கிறது என்று நீயும் நம்பத் தொடங்கினால் சாமியாராகிவிடு இல்லையென்றால் மனநல மருத்துவரைப் பார்த்து சிகிச்சையைத் தொடங்கு.