- கேள்வி : குடும்பத்தில் சிக்கல் வராமல் இருக்க நாம் அன்பாகப் பழகவேண்டியது மனைவியிடமா அல்லது தாயிடமா? க.முத்துமாரி, கள்ளிக்குடி.
ஞானகுரு :
ஏன்… ஒரே நேரத்தில் இருவருடமும் அன்பு செலுத்தினால் தேய்ந்துபோய் விடுவாயா..? மனைவியும் தாயும் இரண்டு துருவமாகப் பிரிந்துநின்றாலும், அவர்கள்தான் உன்னை இணைக்கும் அன்புச்சங்கிலி. அதனால் நீ இவர்களிடம் மட்டும் அன்பு செலுத்தினால் போதாது. இவர்களைத் தாண்டியும் குழந்தை, அக்கம்பக்கத்து குடும்பத்தினர், பக்கத்துத் தெருவினர், ஊர்க்காரர்கள் என்று விரிவடைந்துகொண்டே செல்லவேண்டுமே தவிர, குறுகக்கூடாது.