- கேள்வி : அனைத்து மதத்தினரும் தங்களது கடவுளைத் தரிசிக்கச் செல்வது ஏன்..? டி.எழிலரசி, மன்னார்குடி.
ஞானகுரு :
பயம் என்ற மாயக்கயிறு அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானது. பயத்தை விரட்டும் கடவுள் அவன் நெஞ்சுக்குள் இருப்பதை எவரும் உணர்வதே இல்லை. கைதி போன்று கோயில்களில் மட்டுமே கடவுள் இருப்பதாக நம்புவதால், அங்கே போய் நிற்கிறான். மனித நெரிசலைத் தாங்க முடியாமல் கடவுள் கோயில்களில் இருந்து எப்போதோ காணாமல் போய்விட்டார்.