- கேள்வி : மரணம்தான் நிச்சயிக்கப்பட்டுவிட்டதே… பின் ஏன் பண வெறி?ராணி பாத்திமா, லட்சுமி நகர்.
ஞானகுரு :
மரணம் அடுத்த வீட்டு வாசலோடு நின்றுவிடும் என்பதுதான் மனிதனின் எண்ணம். கடவுளே வந்து அழைத்தாலும் உடன் செல்ல எந்த மனிதனும் விரும்பமாட்டான். தன்னை நித்ய ஜீவிதனாகவே நினைப்பதால்தான் வெறி பிடித்து அலைகிறான். முற்றும் துறந்த சாமியார்களும், தன்னை மரணமில்லாதவனாக நினைப்பதுதான் மடங்களுக்கே உள்ள அவமானம்.