- கேள்வி : பணம் சம்பாதிக்க ஆடவர்கள் படும் கஷ்டத்தை பெண்கள் புரிந்துகொள்ளாதது ஏன்? சேக் முகம்மது, நெல்லை.
ஞானகுரு :
பெண் ரத்தம் சிந்தும் நாட்களின் வேதனையை, அசெளகர்யத்தை என்றேனும் உணர்ந்து பரிதவித்திருக்கிறாயா… பத்து மாதங்கள் உன் உயிரை வயிற்றில் சுமந்தபோது, அவளை உன் தோளில் சாய்த்துக்கொண்டாயா… விதவிதமாய் எப்படி சமைத்தாய் என்று விரல்களைப் பிடித்துவிட்டாயா? இல்லையே… ஆனால் நீ வெளியில் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவதை உணர்ந்து, வீட்டுக்கு வந்ததும் அரசனைப் போல் உன்னை உபசரித்து கால் அமுக்கிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய். அப்படித்தானே… அந்த ‘அடிமைப் பெண்கள்’ காலம் முடிந்துவிட்டது. வாசல் படியைத் தாண்டினால் பெண்ணும் பணம் சம்பாதிப்பாள். வீட்டுக்குள் அவளை அடைத்துவைத்து கொக்கரிக்காதே… சேவல் கூவி பொழுதுகள் விடிவதில்லை.