கேள்வி : புகழ் எனும் மாயைக்கு ஏன் அடிமையாகிறோம்?
- ரஞ்சிதா, கங்கை தெரு.
ஞானகுரு :
புகழ் என்பது மனிதனை சிக்கவைக்கும் வலை. ‘இவனைப்போல் சிறந்த உழைப்பாளி யாரும் இல்லை, இவன் இல்லையென்றால் எனக்குக் கை உடைந்ததுபோல் இருக்கும்’ என்று முதலாளி சொல்லும் புகழ் மொழிக்கு ஒருவன் மயங்கினால், அவன் வாழ்நாள் முழுவதும் அடிமையாகத்தான் இருப்பான். ‘இவளைப்போல் அழகி வேறு யாருமில்லை’ என்ற புகழுக்கு பெண் மயங்கினால், பாராட்டியவனுக்கு அடிமையாக மாறிப்போவாள். வெற்றிக்கு ஆசைப்படுபவர்கள் புகழ் மொழிகளை காதில் வாங்காமல் நடைபோடுவார்கள். புகழுக்கு நீ அடிமையாகிவிட்டால், அடுத்து கிடைக்கப்போவது தோல்வி மட்டும்தான்.