கேள்வி: இந்து மதத்தில் மட்டும் ஏராளமான கடவுள்கள் நிறையவே இருக்கக் காரணம் என்ன?
- குருசாமி, நாகர்கோவில்
ஞானகுரு :
ஒரு நிறுவனத்தை திறம்பட நிர்வகிப்பதற்கு அதிகாரிகள், பணியாட்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என எத்தனையோ பேர் தேவைப்படுகிறார்கள். இவற்றைக் கணக்கிட்டுத்தான், இந்த உலகை நிர்வகிக்க நிறைய கடவுள்களை மனிதன் உருவாக்கியுள்ளான். ஆயிரம் கடவுள்கள், லட்சக்கணக்கான கோயில்கள் இருந்தாலும் திருப்தியடையாமல் இன்னும் சக்திவாய்ந்த கடவுளைத் தேடி காசி, இமயமலை, ஜெருசலேம், மெக்கா என்று மக்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதன் அர்த்தம், ஒவ்வொரு மனிதனும் அவனுக்கென்று ஒரு கடவுளை தேடுகிறான் என்பதுதான்.