கேள்வி : வாழ்க்கையில் எது இன்பம்?
- கனகா, ஆம்பூர்
ஞானகுரு :
சுவையான உணவு, சுற்றுலா, சுகமான உறக்கம், பதவி என்று ஒவ்வொருவருக்கும் இன்பம் ஒரு வகையில் கிடைக்கும். ஆனால், இந்த இன்பங்கள் எதுவுமே நிலைத்து நிற்பதில்லை. ஆம், பிரியாணியில் இன்பம் கிடைக்கிறது என்பதற்காக மூன்று வேளையும் பிரியாணியே சாப்பிடச்சொன்னால், அதுவே துன்பமாகிவிடும். அதனால் உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதுதான், உண்மையான இன்பம். உன்னுடைய தகுதிக்கு மீறி அல்லது உனக்குத் தகுதியில்லாத ஒன்றுக்கு ஆசைப்பட்டால், கையில் இருக்கும் இன்பத்தையும் இழந்துவிடுவாய்.