கேள்வி : சிங்கம், புலி போன்ற விலங்குகளை எல்லாம் கண்டிப்பாக பாதுகாக்கத்தான் வேண்டுமா?

  • புஷ்பம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஞானகுரு :

மனிதனுக்கு அழிக்கத்தான் தெரியும், எதனையும் பாதுகாக்கத் தெரியாது. காட்டுக்குள் தொட்டி கட்டி நீர் ஊற்றியோ, மிருகக்காட்சி சாலையில் ஒரு வேளை உணவு போட்டோ மிருகங்களைப் பாதுகாக்க முடியாது. அதேபோல் கொசு, பாம்பு, புலி என எந்த உயிரினத்தையும் முழுமையாக பூமியிலிருந்து அழிக்கவும் முடியாது. ஏனெனில் உயிர்களைப் பாதுகாப்பதும் அழிப்பதும் இயற்கையின் வேலை மட்டுமே. உயிர்களின் சமநிலை தவறும்போது இயற்கை தன்னுடைய வீரியத்தைக் காட்டும். டைனோசர்கள் திடீரென பூமியில் இருந்து மறைந்ததுபோல், மனிதனும் ஒரு நாள் காணாமல் போகலாம். மீண்டும் சிங்கமும் புலியும் ஆட்சிக்கு வரலாம். அதுவரை மனிதனை மனிதன் பாதுகாத்தால் போதும்.

Leave a Reply

Your email address will not be published.