கேள்வி : இரவில் தூக்கமே வருவதில்லை, என்ன காரணமாக இருக்கலாம்?
- சி.சந்திரா, தென்காசி.
ஞானகுரு :
பசி, வலி, கிலி இருந்தால் தூக்கம் வராது. உடலும் மனதும் நலமாய் இருக்கும்போது தூக்கம் வரவில்லை என்றால் அது நோயல்ல, வரம். பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது, ஒழுங்குபடுத்துவது என விருப்பமானதை விடியவிடிய செய்துகொண்டே இரு. ஏனெனில் உடல் புத்துணர்வுக்கு அரை மணி நேரத் தூக்கமே போதும். அது தேவைப்படும் நேரத்தில் நிச்சயம் வரும்.
எந்த கணத்தில் தூக்கம் வந்தது என்பதை என்றாவது குறித்து வைத்திருக்கிறாயா… உடலுக்குத் தேவைப்படும்பட்சத்தில் நீ அனலுக்குள் இருந்தாலும் புனலுக்குள் இருந்தாலும் சரி, தூக்கம் வந்தேவிடும். அதுவரை விழிப்பைக் கொண்டாடு.