கேள்வி : உறவினர் உயர்ந்தவரா… நண்பர் உயர்ந்தவரா?
- செந்தாமரைக் கண்ணன், கடலூர்.
ஞானகுரு :
சந்தேகமே இல்லாமல் உறவுக்குத்தான் என்னுடைய ஓட்டு. தாய் & மகன், தந்தை & மகள், கணவன் & மனைவி போன்ற உறவுக்கு ஈடாக எந்த நட்பையும் சொல்லமுடியாது. நண்பர்கள் இளமைக்கு ‘ஜே’ போடும் கூலிங்கிளாஸ் என்றால் உறவுகள் வெள்ளெழுத்துக் கண்ணாடிகள். முதுமையிலும் வறுமையிலும்தான் உறவினர்களின் மகிமை தெரியும். உன் உறவினர் சரியில்லை என்றால், நீ சரியில்லை என்றுதான் அர்த்தம். நண்பர்களை உயர்ந்தவர்களாக பார்க்க வேண்டியதில்லை, ஏனென்றால் நல்ல நண்பன் அதற்கும் மேலானவன்.