கேள்வி : கல்வி வாழ்க்கைக்குத் தேவைதானா?
- ராமசாமி, ஈரோடு.
கண் திறக்காத பச்சிளங்குழந்தை, தானாகவே தாயின் மார்பைத் தேடி பால் குடிக்கிறது. மீன் குஞ்சுகள் பிறக்கும்போதே நீந்துகின்றன. யாரும் சொல்லிக்கொடுக்காமலே முட்டையை உடைத்து குஞ்சுகள் வெளிவருகின்றன. உயிரினங்களுக்கு இந்த உள்ளுணர்வு கொஞ்சகாலம்தான் பயன்தருகிறது.
அதன்பிறகு போட்டியிட்டுத்தான் உணவுபெற முடியும். மிருகங்களும் பறவைகளும் சண்டைபோட்டு உணவைக் கைப்பற்றுகின்றன. மனிதன் கல்வியைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்திப் போராடுகிறான். உணவுப் போராட்டத்தில் பங்கெடுக்க கல்வி எனும் ஆயுதம் வேண்டுமா வேண்டாமா என்பதை நீதான் தீர்மானிக்கவேண்டும்.