கேள்வி : ஒருவர் நல்லவரா என்பதை எப்படி எளிதில் அறியலாம்?
- மாரியப்பன், அருப்புக்கோட்டை
ஞானகுரு :
நல்லவனா, கெட்டவனா என்று மனிதனை ஆய்வுசெய்து முடிவு சொல்லும் ஸ்கேன் மெஷின், இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். நீ நல்லவனாக இருந்தால், நல்லவர்கள் மட்டும்தான் உன் கண்ணில் தட்டுப்படுவார்கள். கெட்டவன் என்றால் உலகமே தவறான பாதையில் போவதாகத் தெரியும். நீ எப்படிப்பட்டவன் என்பதை புரிந்துகொண்டாயா…