- மரணத்திற்குப் பயமும் உயிர் வாழ்வதற்கு சந்தோஷமும் ஏன் ஏற்படுகிறது? எஸ்.ராஜா, சென்னை.
‘உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன்… என்னுடன் வா’ என்று கடவுள் நேரில் வந்து அழைத்தாலும் மனிதர்கள் கிளம்ப மாட்டார்கள். ஏனென்றால் இப்பூமியில் இத்தனை காலமும் வாழ்ந்து பழகிவிட்டார்கள். மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என்று புரியாத பயம்தான் உயிர் வாழ்வதற்கு எத்தகைய போராட்டத்தையும் எதிர்கொள்ளும் வலிமை தருகிறது.