- மனைவிக்கு கணவன் தெய்வமா? மங்கையர்க்கரசி, முத்தால்நகர்.
ஞானகுரு :
கணவனை தெய்வமாக நினைப்பது தவறு இல்லை. அப்படி ஓர் ஆண் தெய்வத்தை பெற்றவள் அதைவிட சக்தி வாய்ந்த தெய்வம் அல்லவா? அதனால் முதலில் பெண்ணைத்தான் ஆண் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண் தெய்வமே மெச்சும் அளவுக்கு ஆண் நடந்துகொண்டால், அந்த கணவனை மனைவியும் தெய்வமாகத் தொழலாம்.