- பணம் பெரிதா… கடவுள் பெரிதா? செல்லக்கனி, வாழைத் தோப்பு.
ஞானகுரு :
இதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக பணம்தான் பெரிது. ஏனென்றால் இந்த உலகில் கடவுளால் முடியாததை பணம் சாதிக்கிறது. ஆயிரங்களுக்கு மயங்காத அதிகாரி லட்சங்களில் விழுந்துவிடுகிறான். தங்கத்திற்கு மயங்காத பெண் வைரங்களுக்கு அடிமையாகிறாள். பணத்துக்காக கொலை நடக்கிறது. ஏன், ஓர் உயிரை பிழைக்கவைக்கவும் மருத்துவனுக்கு பணம் தேவையாக இருக்கிறது. அதனால்தான் இந்த உலகில் மனிதர்கள் யாரும் கடவுளைத் தேடுவதில்லை, பணத்தைத் தேடி ஓடுகிறார்கள். பணத்தை அடைந்தவனுக்குத்தான் கடவுளின் அருமை தெரியவரும். அதுவரை பணத்தை தேடு.