- தினமும் எழுவது, சாப்பிடுவது, உழைப்பது, தூங்குவது என்று இயந்திரத்தனமாக இருக்கிறதே… இதுதான் வாழ்க்கையா? சி.குருசாமி, ஆம்பூர்
ஞானகுரு :
எந்த ஒரு செடியும் மலர்வதற்கு சலிப்பதில்லை. எந்த ஒரு நதியும் ஓடுவதற்குத் தயங்குவதில்லை. ரசிர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் பார்க்காமல்தான் குயில்கள் கூவுகின்றன. இயற்கை அதனதன் வேலையை செவ்வனே செய்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும்தான், அவன் செயலில் அலுப்பு உண்டாகிறது. இப்படியொரு சிந்தனை நல்லதுதான். ஆனால், தினமும் எழுவதும், சாப்பிடுவதும், உழைப்பதும், தூங்குவதும் இயல்பாக நடக்கிறது என்றால், அதைவிட சிறந்த சொர்க்கம் வேறு எங்கு இருக்க முடியும். இதில் இயந்திரத்தனம் வேண்டாம் என்றால் இரண்டு நாட்கள் மட்டும் சாப்பிடாமல் இருந்து பார். பசிதான் வாழ்க்கை என்பது புரிந்துவிடும்.