- என்னுடைய வேலையை திறம்பட செய்கிறேன். ஆனால் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவே இல்லையே? பார்த்திபன், மெயின் பஜார், தஞ்சாவூர்
ஞானகுரு :
நோபல் பரிசு வாங்கவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் எந்த விஞ்ஞானியும் ஆய்வு செய்வதில்லை. விருதுக்காக எந்த எழுத்தாளனும் எழுதுவது இல்லை. அவர்வர்கள் செய்யும் வேலையை ஆர்வத்துடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் செய்கிறார்கள், அங்கீகாரம் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆனால், நீ செய்த செயல் உனக்கு முழு திருப்தி தந்தால் அதுதான் ஆகப்பெரிய பரிசு.
அதனால் நீ உண்மையில் வேலையை காதலுடன்தான் செய்கிறாயா என்று பரிசோதனை செய்துபார். பணத்துக்காகவும், புகழுக்காகவும் நீ வேலை செய்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்காது. ஏனென்றால் அங்கீகாரத்துக்கு ஏங்குபவனால் எந்த வேலையையும் திருப்தியாக செய்யமுடியாது.