- எனக்கு அடுத்த மாதம் குழந்தை பிறந்துவிடும். பிரசவ வலி பற்றிய பயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்து நல்ல நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இது சரிதானா?
- எம்.புவனேஸ்வரி, கூடல் நகர்.
ஞானகுரு :
முடிவு எடுத்துவிட்டு கேள்வி கேட்பது முட்டாள்தனம். உன்னைப் போல் வேறு யாரும் முயற்சிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதில். பாம்பு கடித்து செத்தவர்களைவிட, பயத்தில் செத்தவர்கள்தான் அதிகம். அதுபோலத்தான் பிரசவ வலி பெண்களை பயமூட்டுகிறது. திடமான நம்பிக்கை, வலியைக் குறைக்கும் மூச்சுப் பயிற்சி, குழந்தை வெளிவருவதற்கான சரியான நிலை ஆகியவற்றுடன் ஆதரவாகப் பேசும் மருத்துவரும் இருந்துவிட்டால், கோழி முட்டையிடுவது போல் மிகச்சிறிய வேதனையுடன் குழந்தை பிரசவிக்க முடியும். ஆதித் தாய்மார்கள் அப்படித்தான் இந்த உலகில் மனிதர்களை நிரப்பியிருக்கிறார்கள்.
இன்னொன்று தெரியுமா? இந்த உலகிலேயே மிகுந்த வலி என்றும் பிரசவ வலியை சொல்வது உண்டுதான். ஆனால், அந்த வலியை தாங்கும் சக்தி பெண்ணுக்கு மட்டுமே உண்டு. அந்த அனுபவத்தை நீ இழப்பதால் இழப்பு உனக்குத்தான்.
அதைவிடு, குழந்தை இந்த பூமியை தரிசிக்கும் நேரத்தைத்தான் நல்ல நேரம் என்கிறாயா? பெண்ணின் கருவணுக்குள் ஆண் அணு நுழைந்த நேரம், கருவுக்கு உயிர் வந்த நேரத்தை எல்லாம் கணக்கிட மாட்டாயா?