- ஆன்மிகத்தின் எல்லை எது? சுப்பிரமணி, லட்சுமிபுரம்.
ஞானகுரு :
மனிதன் கடவுள்தன்மைக்கு மாறுவதுதான் ஆன்மிகத்தின் எல்லை. இதற்காக காட்டுக்குப் போய் தவம் செய்யவோ, பணத்தை வாரியிறைத்து பூஜை செய்யவோ வேண்டியதில்லை. பிரச்னை, கஷ்டம், துன்பம் என்று வருபவர்களின் குறைகளை அமைதியாக…முழுமையாக கேள். அது போதும். கருவறையில் இருக்கும் கடவுளும் அதைத்தானே செய்கிறார். இன்னும் சுருக்கமாகச் சொல்வது என்றால், எல்லா விஷயங்களிலும் கல்லாகிவிடு.