- கேள்வி : காதலுக்கு ஏன் பெற்றோர்கள் எதிரியாக இருக்கின்றனர்..?
- கே.கவிதா, பாண்டியன்நகர்.
ஞானகுரு :
நேற்றைய காதலர்கள்தான் இன்றைய பெற்றோர் என்பதை மறக்காதே. இத்தனை நாளும் அன்பு கொடுத்து வளர்த்த பிள்ளையிடம், தங்களுக்கு இருக்கும் உரிமை, பாசம், எதிர்பார்ப்பு எல்லாம் காணாமல் போய்விடுமே என்ற பயத்தினால் காதலை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு உதவுவது போன்று அந்தஸ்து, சாதி, மதம் போன்றவை குறுக்கிடும்போது, எதிர்ப்பு இன்னமும் தீவிரமாகிறது. பிள்ளைக்கு இன்னமும் விபரம் புரியவில்லை என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். பெற்றோர்களுக்கு பெருந்தன்மை இல்லை என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். இந்த விளையாட்டு காலம் உள்ளவரை நடந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பெற்றோரின் எதிர்ப்பினால் மட்டுமே உண்மையான காதல் தோற்றுப் போவதில்லை