- கேள்வி : என்ன இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம்? ஜெ.மரியபுஷ்பம், சிவந்திபுரம், ஆத்தூர்..
ஞானகுரு :
எதுவுமே இல்லை என்றால்தான் சந்தோஷமாக இருக்கமுடியும். அதாவது நோய், கோபம், பொறாமை, ஆத்திரம், ஆசை இல்லையென்றால் சந்தோஷமாக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் எவர் மீது அன்பும் பற்றுதலும் இல்லையென்றால் நிறைய நிறைய சந்தோஷம் கிடைக்கும். இருக்கவேண்டியது என்றால், அது நிம்மதி மட்டும்தான்.