1. கேள்வி : பணத்துக்காக உடல் விற்பவளையும் பெண் என்று கொண்டாட வேண்டுமா? எஸ்.சிவஞானம், விருதுநகர்.

ஞானகுரு :

பெண்ணின் உடலுக்குள் இன்பத்தைத் தேடியலையும் ஆண்கள் இருக்கும்வரை, இப்படிப்பட்ட பெண்களும் இருக்கத்தான் செய்வார்கள். காமத்தில் தோல்விகண்ட ஆண்கள்தான், வெவ்வேறு பெண்களிடம் இன்பம் தேடி அலைகிறார்கள். ஆனால், அந்த முயற்சிகள் எல்லாமே வீண்தான். ஏனென்றால் பெண்ணை வெற்றிகொண்டு இன்பம் அனுபவிக்க எந்த ஆணாலும் முடியாது. உன்னுடைய காமத்துக்கு மட்டுமே வடிகாலாக இருக்கும் உன் மனைவியை நீ கொண்டாடுகிறாய். பலருடைய அகந்தைக்கும், வெறிக்கும் வடிகாலாக இருக்கும் இவர்களை இழிவாகப் பார்ப்பாயா..? எல்லா அழுக்குகளையும் தாங்கிக்கொண்டு ஓடும் கங்கையைப் போன்று இவர்களையும் வணங்குவதற்கு கற்றுக்கொள்.

Leave a Reply

Your email address will not be published.