- கேள்வி : சுயநலமாய் இருப்பது நல்லதா… கெட்டதா? ஏ.ஆரோக்கியராஜ், லட்சுமிநகர்.
ஞானகுரு :
சுயநலம் என்பதுதான் உயிர்களுடன் ஒட்டிப்பிறந்த இயல்பு என்பதால் அதில் எந்தத் தவறும் இல்லை. நீ நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணும் சுயநலம், நியாயமானதுதான். இதுதான் உடலின் தத்துவம். நீ நன்றாக இருந்தால்தான் அடுத்தவர்க்கு ஏதாவது உதவி செய்ய முடியும். ஆனால் நீ மட்டுமே நன்றாக இருக்கவேண்டும் என்று, பிறருக்குத் துன்பம் எண்ணுவதுதான் பேதமை.