- கேள்வி : நான் தினமும் ஒன்றரை மணி நேரம் பிரார்த்தனை செய்கிறேன், ஆனாலும் மனதில் இனம்புரியாத சோகம் இருந்துகொண்டே இருக்கிறது.. ஏன்? ராம்பத்ரன், , நாமக்கல்.
ஞானகுரு :
உன் பிரார்த்தனையை கடவுள் கேட்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் உனக்கு வந்துவிட்டது. அதனால்தான் திருப்திக்குப் பதிலாக சோகம் வருகிறது. இனி, பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக நிம்மதியாக தூங்கு அல்லது ஒரு நல்ல திரைப்படம் பார். அது உனக்கு புதிய உலகத்தைக் காட்டும்.