பள்ளிக்கூடத்தில் கற்றுத்தரும் கல்வி முறை எந்த அளவுக்கு மாணாக்கரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்?
- எஸ்.சுந்தரராஜன், கன்னியாகுமரி.
ஞானகுரு : பள்ளியில் கற்பிக்கப்படும் கல்வி முறையானது அறிவூட்டம் கொடுப்பதாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய கல்வி வேலைவாய்ப்பை நோக்கியே செல்கிறது. மழை, காற்று, வெயில் போன்று சகலருக்கும் சமமான கல்வி வேண்டும். ஆனால், செல்வந்தருக்கு ஒரு கல்வியும், ஏழைகளுக்கு ஒரு கல்வியுமாக இருப்பது பேரபத்தம். எல்லோரையும் ஏற்றிவிட வேண்டிய ஏணி இப்போது கீழே கிடக்கிறது. அதனை தூக்கி எடுத்து மரத்தில் சாய்த்து ஏறுபவர்கள் வெற்றிக் கனியைப் பறிக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தபடி தாண்டிச் செல்கிறார்கள். உண்மையில் நல்ல கல்வி முறை, நல்ல கல்விக் கூடம் என்று எதுவுமே இல்லை. நல்ல மாணாக்கன் மட்டுமே உண்டு. அதனால் நல்ல மாணாக்கரை உருவாக்கு