தாய்மை பற்றியே உயர்வாக பேசப்படுகிறதே, தந்தை நிலை சும்மாதானா?
- ஏ.அரவிந்த், சின்னமனூர்.
ஞானகுரு: மூளையைவிட வயிறுதான் மனிதனுக்கு முக்கியம். அதனால்தான் வயிறுக்கு உணவு கொடுப்பவரையே தெய்வமாக நினைக்கிறான். தன்னுடைய பசியை மறாந்து, பிள்ளையின் வயிறு காயக்கூடாது என்று பார்த்துப்பார்த்து உணவு கொடுப்பதால்தான், தாயையும் தாய்மையையும் உயர்வாகச் சொல்கிறான் மனிதன். அந்த உணவு பெறுவதற்கு வியர்வை சிந்தி உழைத்தாலும், தந்தை எப்போதும் காவல் புரியும் வேட்டை நாய்தான்.