ராசிக் கற்கள் பதித்த மோதிரத்தால் மனிதருக்கு அதிர்ஷ்டம் வர வாய்ப்பு உண்டா?
– வி.காமாட்சி, செந்திவிநாயகபுரம்.
ஞானகுரு :
குடும்பப் பிரச்னை, கடன் தொல்லை, தீராத நோய், தொழில் நஷ்டம் போன்ற எந்தப் பிரச்னை என்றாலும் பொருத்தமான ராசிக் கல்லை அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்களும் ஏற்றங்களும் பெறமுடியும் என்று நம்பிக்கையை விதைக்கும் ஜோதிடனுக்கு மட்டுமே அதனால் பயன் உண்டு. பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத கற்களையும் ராசிக் கற்கள் என்று ஏமாற்றி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் பயன் உண்டு. மோதிரத்துக்குள் உறங்கும் கற்கள் உன் வாழ்க்கையை மாற்றிவிடும் என்றால், உன் காலுக்குக் கீழே புதைந்துகிடக்கும் பொக்கிஷங்களுக்கு உயிர் இல்லையா…