நான் நல்லவனா… கெட்டவனா என்பதை எப்படி அறிந்துகொள்வது?
- பி.ராமலிங்கம், மெயின் பஜார், சீர்காழி.
ஞானகுரு :
நீ செத்துப்போனால் எளிதாக தெரிந்துகொள்ளலாம். அதற்காக நிஜமாக சாக வேண்டியதில்லை. கண்ணை மூடிக்கொண்டு, மரணம் வந்துவிட்டதைப் போல் நினைத்துப் பார்த்தால் போதும். ஆம், கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு கண்களை மூடு. உடலில் இருந்து உயிரைப் பிரித்து, உன் உடலையே நீ வேடிக்கை பார். உன் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லாம் உன் மரணத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்று மனதினுள் கற்பனை செய். உன் எதிரிகள் என்ன நினைப்பார்கள், உன்னுடன் பணி புரிபவர்கள் என்ன பேசுவார்கள் என்று, அவர்கள் பக்கத்தில் இருந்து யோசித்துப் பார். யாராவது ஒரே ஒருவராவது உன் மரணத்துக்காக சந்தோஷப்படலாம் என்று நீயே நினைத்தால், நீ கெட்டவன்.