கடவுளை தரிசனம் செய்திருக்கிறீர்களா? ஆம் என்றால் அனுபவம் எப்படி இருந்தது?
- எஸ்.விவேகானந்தன், மயிலாடுதுறை.
நான் கடவுளை தரிசனம் செய்தேன் என்று சொன்னால் நீ நிச்சயம் நம்பப் போவதில்லை. பிறகு ஏன் இப்படி ஒரு கேள்வி. உண்மையில் கடவுள் தரிசனத்தை உணர்த்தும் வலிமை எந்த எழுத்துக்களுக்கும் இல்லை. தேனின் சுவையை சுவைத்துத்தான் அறியமுடியும், தேன் என்று எழுதினால் இனிக்காது. நீயும் தேனை குடி.