கேள்வி : எது அழகு? உடலா… உள்ளமா?
- எஸ்.சங்கரபாண்டியன், சூலக்கரைமேடு.
ஞானகுரு :
ஆணின் உடல் பலமும் பெண்ணின் முகப் பொலிவும் முன்பு அழகாக கருதப்பட்டது. இப்போது பெண் புத்திசாலியாகி விட்டாள். எந்தப் பெண்ணும் ஆணிடம் பலத்தை எதிர்பார்ப்பதில்லை, பணம் சம்பாதிக்கும் திறனைத்தான் அழகாகப் பார்க்கிறாள். ஆனால் பெண்ணின் முகப் பொலிவில்தான் அழகு இருப்பதாக நினைத்து ஆண் ஏமாந்துகொண்டு இருக்கிறான். ‘தன் உடலில் நிறைய குறைகள் இருக்கின்றன, அதனால் நான் நிஜமான அழகி இல்லை’ என்ற உண்மை உலக அழகிகள் அத்தனை பேருக்கும் உண்டு. அதனால் உடல் அழகல்ல. கண்டதையும் விவஸ்தை இல்லாமல் ஆசைப்படும் உள்ளம் ஒருபோதும் அழகாக இருக்கமுடியாது.
அப்படியென்றால் அழகு? அழகற்றதாக இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை என்ற புரிதல்தான் அழகு.