ஏதாவது சாதனை செய்தால்தான், மனிதனாகப் பிறந்து வாழ்ந்ததற்கு அர்த்தமா?
- எஸ்.குமரேசன், மதுரை .
ஞானகுரு :
அப்படி எந்த மடையன் சொன்னது? எந்தப் பறவையும் விலங்கும், அது வாழ்ந்த தடத்தை விட்டுச் செல்வதில்லை. சாதனை, வெற்றி என்ற குறியீடு எல்லாம் அடுத்தவருடன் ஒப்பிடும்போது உனக்குக் கிடைப்பதுதான். நீ தனி மனிதனாக ஒரு தீவில் அகப்பட்டுக்கொண்டால், ஏதாவது சாதனைகள் செய்ய ஆசைப்படுவாயா அல்லது எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்று நினைப்பாயா? பிறர் பாராட்டுவதற்காக சாதனை செய்ய நினைக்காதே… இயல்பாக வாழு. காற்று போல் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போ.