கனத்த இதயத்துடன் ஒரு பெற்றோர் ஞானகுருவிடம் வந்து நின்றனர். ‘’என்னுடைய மகன் வேகமாக பைக் ஓட்டிச்செல்லும்போது விபத்தில் சிக்கிவிட்டான். கிட்டத்தட்ட 15 நாட்களுக்குப் பிறகு, அவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவன் உடல் உறுப்புகளை தானம் கேட்கிறார்கள், கொடுத்துவிடலாமா? இறந்த பின்னும் அவன் உயிர் வாழ்வான் என்கிறார்கள். மனம் சஞ்சலப்படுவதால் உங்களிடம் அனுமதி கேட்க வந்தேன்’’ என்று கதறினர்.

‘’உன் மகனை கொலை செய்யலாமா என்று கேட்க வந்திருக்கிறாய், அப்படித்தானே?” என்று கேட்டதும் கதறினார்கள்.

‘’நாங்கள் விருப்பப்பட்டா செய்கிறோம் சாமி. அவனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டது என்கிறார்களே..?”

‘’அப்படியா? மூளை சாவு அடைந்துவிட்டால் என்னாகும்..?””

‘’உடல் இயங்காது, இனிமேல் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை..’’

‘’அப்படியென்றால், அவன் இதயம் இயங்கவில்லையா, ரத்தம் ஓடவுல்லையா, மூச்சு இயங்கவில்லையா?”

‘’அதெல்லாம் நடக்கிறது. ஆனால் எல்லா உறுப்புகளும் சேதம் அடைந்துவிட்டதால்,இனி பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்…’’

‘’ஓர் உயிரை கொலை செய்யும் அதிகாரம் இந்த உலகில் யாருக்கும் இல்லை மகனே. அவன் உடல் இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. மூளை செத்துவிட்டது என்றால் இதயமும் இயங்காது,மூச்சும் செல்லாது. இயற்கை அடுத்த நொடியில் ஒளித்துவைத்திருக்கும் ரகசியம் யாருக்கும் தெரியாது, அதனால் காத்திரு…’’

‘’என் மகன் பிழைத்துவிடுவான் என்கிறீர்களா..?”

‘’பிழைக்கலாம் அல்லது பிழைக்காமல் போகலாம். ஆனால், அவனை நீ கொல்ல வேண்டாமே…’

‘’இதே நிலையில் வைத்து கவனித்துக்கொள்ள எக்கச்சக்க பணம் வேண்டும் என்கிறார்கள். அவனால் ஏழெட்டு உயிர் பிழைக்கும் என்கிறார்கள்…’’

‘’நல்லது, வேறு எவருடைய உடல் உறுப்புகளையாவது உன் மகனுக்கு பொருத்தி அவனை உயிர்ப்பிக்கச் சொல். அதுதான் ஒரு நல்ல மருத்துவர் செய்யவேண்டிய கடமை. உயிரோடு இருக்கும் ஒருவனை கொல்ல நினைக்காதே… நீ வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படுவாய்… மருத்துவர்களின் வியாபாரத்துக்கும் அவசரத்துக்கும் துணை போகாதே…’’

தெளிவான முடிவுடன் தம்பதியர் கிளம்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *