கேள்வி : விவசாயம் அழிவதற்கு என்ன காரணம்?
ஜி.பிரசன்னா, சிவகாசி.
வானத்தை நம்பித்தான் விவசாயம் செய்ய வேண்டும். ஆனால், பூமியில் இருந்து தண்ணீர் தேடுவதே விவசாயத்துக்கு செய்யும் தீமைதான். இப்போது, விவசாயிகள்தான் அழிகிறார்கள், விவசாயம் அல்ல. எந்தக் காலத்தையும்விட இப்போதுதான் அதிகபட்ச அறுவடை நடக்கிறது. உழைக்கும் மனிதர்கள் கையில் இருந்த விவசாயத்தை கார்ப்பரேட் மனிதர்கள் பறித்திருக்கிறார்கள். அவ்வளவுதான். விவசாயம்தான் என்றென்றும் அழியாத தொழில் என்பதை மனிதர்கள் அறியும்போது, அங்கே அதற்கு மனிதர்களின் தேவையே இருக்காது என்பதுதான் உண்மை.