கேள்வி : வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்க்கும்போது மனிதனாய் பிறந்ததைவிட விலங்காகப் பிறந்திருக்கலாமோ..?
- வி.கற்பகம், திருச்சுழி.
ஞானகுரு : இக்கரைக்கு அக்கரைப் பச்சை. தன் இலையில் விழுந்ததைவிட பக்கத்து இலை நண்பனுக்கு பெரிய லட்டு விழுந்திருக்கிறது என்று ஆதங்கப்படும் மனிதர்கள்தான் இங்கே அதிகம். கிடைத்ததை அனுபவிக்காமல் பறப்பதற்கு ஆசைப்படாதே. ஒரு தெருநாயை தடவிக்கொடுத்து வாழ்க்கையைக் கேட்டுப்பார், ஒரு வாய் உணவுக்காக நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் சோகத்தை கொட்டித்தீர்க்கும்.