கேள்வி : மறுஜென்மம் உண்டா?
- எஸ்.விவேக், காமராஜர்புரம்
ஞானகுரு :
விதையின் மரணம் மரமாகிறது. மேகத்தின் மரணம் மழையாகிறது. காலகாலமாக நடக்கும் இந்த சுழற்சியினால் பிரபஞ்சத்தில் உருவான எதுவும் முற்றிலும் அழிவதில்லை. ஓர் அழிவு மற்றொன்றின் தொடக்கம் என்பதால் ஸ்தூல உடலுக்கும் சூட்சும உடலுக்கும் அழிவே கிடையாது. அடுத்த ஜென்மம் இருந்தாலும் அதனை உன்னால் அறியமுடியாது. அறிவதற்கு அவசியமும் இல்லை. அதனால் இந்த ஜென்மத்தை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு முயற்சி செய், மறுஜென்மத்தை இறைவன் பார்த்துக்கொள்வார்.