கேள்வி : மறு பிறவி உண்டா?
- சி.கோபிராஜ், நெல்லை
ஞானகுரு : மறு பிறவி இல்லாத வாழ்க்கை எது? கம்பளிப் பூச்சி பட்டாம் பூச்சியாக உருமாறுகிறது. ஒவ்வொரு மனிதனும் குழந்தையாக, மாணவனாக, காதலனாக, கணவனாக, தந்தையாக, தாத்தாவாக மாறுவதுதான் மறு பிறவி. இந்தப் பிறவி ரகசியத்தை அறிந்து அனுபவித்து வாழத் தெரியாத மனிதர்கள்தான் அடுத்த பிறவி ரகசியத்தை அறிந்துகொள்ளத் துடிப்பார்கள்.