கேள்வி : சேவை என்பது என்ன?
என்.நிவேதா, விழுப்புரம்.
ஞானகுரு :
கோயிலுக்கு டியூப்லைட் வாங்கிப்போட்டு, வெளிச்சம் தெரியாதபடி குண்டு எழுத்தில் பெயரை எழுதிவைப்பது அல்ல, தேவை அறிந்து உதவுவது சேவை. நன்கொடை கொடுத்தால் எவ்வளவு விளம்பரம் கிடைக்கும், வரிவிலக்கு இருக்கிறதா என்றெல்லாம் யோசிக்காமல், யாருக்கேனும் உதவி தேவை என்று தெரியவந்தால், அடுத்த கணமே உதவு.